சினிமா செய்திகள்

சிறப்பு வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்தார் சிவகார்த்திகேயன்

'டாக்டர்' படத்தின் வெற்றிக்கு சிறப்பு வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

தினத்தந்தி

சென்னை,

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர். இப்படம் கடந்த 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகி உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்தும் படத்தில் ஒர்க் அவுட் ஆகி உள்ளது. இதனால் டாக்டர் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. 

படத்தின் இந்த  வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு மூன்று மொழிகளில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அவர் அந்தப் பதிவில் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என தமிழிலும் பார்வையாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என தெலுங்கிலும் என் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் சிறப்பு நன்றி என ஆங்கிலத்திலும் தெரிவித்து உள்ளார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?