சினிமா செய்திகள்

'பிரின்ஸ்' படத்திற்காக தெலுங்கில் டப்பிங் பேசுகிறார் சிவகார்த்திகேயன்..?

நடிகர் சிவகார்த்திகேயன் 'பிரின்ஸ்' படத்தில் தெலுங்கிலும் டப்பிங் பேசவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பிரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் 'பிரின்ஸ்' படத்திற்காக முதல் முறையாக தெலுங்கில் டப்பிங் பேசவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் தெலுங்கில் சரளமாகவும் தெளிவாகவும் பேசுவதற்கான நுட்பங்களைக் கற்றுக் கொண்டிருப்பதாகவும், விரைவில் படத்திற்கான டப்பிங் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை