சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் புதிய படம்

பிரபல தெலுங்கு இயக்குனர் ஹரி ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் பரவி உள்ளது.

தினத்தந்தி

சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த வருடம் 'டான், பிரின்ஸ்' படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. 'அயலான்' படம் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

தற்போது 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக டைரக்டர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். மடோன் அஸ்வின் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராகிறது. தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் ஹரி ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும், இந்த படத்தை பிரபல தெலுங்கு பட அதிபர் தில்ராஜு தயாரிக்க இருப்பதாகவும் தகவல் பரவி உள்ளது.

இந்த படமும் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் நடித்துள்ள 'வாரிசு' படத்தையும் தில்ராஜுதான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்