சினிமா செய்திகள்

நடிகர் நாகார்ஜுனாவுக்குச் சொந்தமான இடத்தில் மனித எலும்புக்கூடு விசாரணை

பிரபல நடிகர் நாகார்ஜுனாவுக்குச் சொந்தமான இடத்தில் மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐதராபாத்

தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிகுடா என்ற ஊரில் 40 ஏக்கர் விளை நிலத்தை நாகார்ஜுனா வாங்கினார். இந்த மாதம் முதல் வாரத்தில் நாகார்ஜுனாவின் மனைவியான நடிகை அமலா, அந்த விளைநிலத்தைச் சென்று பார்வையிட்டார்.

இயற்கை விவசாயம் செய்யும் பொருட்டு, மண்ணின் தன்மை குறித்து ஆராய்வதற்காக ஒரு நிபுணர் குழுவையும் அனுப்பி வைத்தார். அந்தக் குழுவானது ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது, துர்நாற்றம் வீசியுள்ளது.

விளைநிலத்தின் அருகே இருந்த பழைய பொருட்கள் அறையில் பார்த்த போது மனித எலும்புக்கூடு கிடந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு சென்ற போலீசார் எலும்புக்கூட்டை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 35 வயது மதிக்கத்தக்கதாகக் கருதப்படும் நபர், 6 மாதத்திற்கு முன் உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் கூறியுள்ளனர். உயிரிழந்த நபர் குறித்தும், அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு