சினிமா செய்திகள்

நடிகர் சங்க கட்டிடத்திற்காக தான் இவ்வளவு போராட்டம், எதிரணிக்கு வாழ்த்துகள்; நடிகர் விஷால் பேட்டி

நடிகர் சங்க கட்டிடத்திற்காக தான் இவ்வளவு போராட்டம் என்றும் எதிரணிக்கு வாழ்த்துகள் என்றும் நடிகர் விஷால் பேட்டியளித்து உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்தலை பாண்டவர் அணி, சுவாமி சங்கரதாஸ் அணி என இரு அணிகளாக பிரிந்து திரையுலகினர் சந்திக்கின்றனர்.

தேர்தலை முன்னிட்டு நடிகர், நடிகைகள் ஓட்டுப்பதிவு நடைபெறும் இடத்திற்கு காலை முதல் வர தொடங்கியுள்ளனர். இந்த தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், நடிகர் சங்க கட்டிடத்திற்காக தான் இவ்வளவு போராட்டம் நடக்கிறது. எதிரணிக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். தேர்தல் நியாயமாக நடைபெறும் என்றும் அவர் பேட்டியளித்து உள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு