சினிமா செய்திகள்

சமூக வலைதள அவதூறு வழக்கு: கெனிஷாவுக்கு அபராதம் விதித்த ஷார்ஜா கோர்ட்டு

கெனிஷாவுக்கு ஷார்ஜா கோர்ட்டு 5,000 திர்ஹாம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஷார்ஜா,

சமூக வலைதளங்களில் இந்திய பெண் ஒருவருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், பாடகி கெனிஷாவுக்கு ஷார்ஜா கோர்ட்டு 5,000 திர்ஹாம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அவதூறு புகார்

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நகரில் வசித்து வந்த இந்திய பெண் ஆன்லெட் மெர்லின், தமக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டதாக குற்றம்சாட்டி அல்புகாரியா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரில் கெனிஷா மற்றும் அருணா வீரராகவன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

குற்றச்சாட்டு நிரூபணம்

வழக்கை விசாரித்த நீதிமன்றம், கெனிஷா மற்றும் அருணா வீரராகவன் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து இருவருக்கும் தலா 5,000 திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.30 லட்சம்) அபராதம் விதித்து உத்தரவிட்டது.