சினிமா செய்திகள்

சமூக அக்கறை கொண்ட 'பகாசூரன்' அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் - அன்புமணி ராமதாஸ் பாராட்டு

செல்வராகவன் நடிப்பில் வெளியாகி உள்ள 'பகாசூரன்' திரைப்படத்தை அன்புமணி ராமதாஸ் பாராட்டியுள்ளார்.

சென்னை,

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது.

இந்த படங்களை தொடர்ந்து இவர் இயக்கியுள்ள 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். 'பகாசூரன்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில் சமூக அக்கறை கொண்ட 'பகாசூரன்' அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வூட்டும் 'பகாசூரன்' திரைப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி, இயக்குனர் - நடிகர் செல்வராகவன் மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்.

சமூக அக்கறை கொண்ட 'பகாசூரன்' அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம்" என்று கூறியுள்ளார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை