image courtecy:instagram@aslisona  
சினிமா செய்திகள்

'14 வருடங்களாக எந்த படத்திலும் முத்தக்காட்சிகளில்... - சோனாக்சி சின்ஹா

நடிகை சோனாக்சி சின்ஹா இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்

தினத்தந்தி

மும்பை,

பிரபல நடிகை சோனாக்சி சின்ஹா. இவர் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். கடந்த 2010-ம் ஆண்டு வெளியான தபாங் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 14 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார்.

தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக 'லிங்கா' படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை சோனாக்சி சின்ஹா தனது 14 வருட சினிமா வாழ்க்கை குறித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

நான் தற்போது எனது 35-வது படத்தில் நடித்து வருகிறேன். ஒரு நல்ல நடிகருக்கு எப்போதும் வேலை இருக்கும். இதுவரை என் வாழ்க்கையில் எந்த படத்திலும் முத்தக்காட்சிகளில் நடித்ததில்லை. நான் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் இயக்குனரிடம்  தொடக்கத்திலேயே இப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிடுவேன். அதற்கு அவர் ஒப்புக்கொண்டு என்னை தேர்ந்தெடுத்தாலும் சரி அல்லது வேறு நடிகையை தேர்ந்தெடுத்தாலும் சரி அதற்கு நான் தயாராகவே இருப்பேன். இவ்வாறு கூறினார்

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து