சினிமா செய்திகள்

2வது குழந்தைக்கு தாயான நடிகை சோனம் கபூர்… குவியும் வாழ்த்து

கடந்த 2018-ம் ஆண்டு சோனம் கபூர், ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்துகொண்டார்.

மும்பை,

பாலிவுட் நடிகை சோனம் கபூர் - ஆனந்த அஹுஜா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டனர். இதனையடுத்து அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்ரனர்.

கடந்த 2018-ம் ஆண்டு சோனம் கபூர், ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு கடந்த 2022-ம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது. தற்போது அவர்களுக்கு 2-வது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

சோனம் கபூர் கடைசியாக 2023ஆம் ஆண்டு வெளியான ’பிலைன்ட்’திரைப்படத்தில் நடித்திருந்தார். இதில் பார்வை குறைபாடு உள்ள போலீஸ் அதிகாரியாக, தொடர் கொலைகாரனை தேடும் கதாபாத்திரத்தில் நடித்தார்.