சினிமா செய்திகள்

'ஒரு நடிகைக்கு பாடல்கள் மிகவும் முக்கியம், ஏனென்றால்... ' - நடிகை ஷர்வரி

ஷர்வரி தற்போது ஆலியா பட்டுடன் 'ஆல்பா' படத்தில் நடித்து வருகிறார்.

தினத்தந்தி

சென்னை,

பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஷர்வரி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படங்கள் முஞ்ஜியா மற்றும் மஹாராஜ். இதில் இவர் நடிப்புக்காக அதிக பாராட்டுகளை பெற்றார். குறிப்பாக, இப்படங்களில் இடம்பெற்ற தாராஸ் (முஞ்யா), ஹான் கே ஹான் (மஹாராஜ்) மற்றும் தைனு கபர் நஹி (முஞ்யா) போன்ற பாடல்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் ஷர்வரி கூறுகையில், "ஒரு நடிகைக்கு பாடல்கள் மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் அவை பார்வையாளர்களின் இதயத்திலும் மனதிலும் இடம் பிடிக்கின்றன' என்றார்

அவர் மேலும் கூறுகையில், "2024 எனக்கு ஒரு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. நான் நடித்த படங்கள் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல், முஞ்யா மற்றும் மஹராஜ் ஆகிய படங்களின் உள்ள பாடல்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளன. என் எதிர்காலத்திலும் இதனை என்னால் தொடர முடியும் என்று நம்புகிறேன். மக்கள் என் மீதும், எனது பாடல்கள் மீதும் பொழிந்துள்ள அன்பிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஷர்வரி தற்போது ஆலியா பட்டுடன் 'ஆல்பா' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி வெளியாக உள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்