சினிமா செய்திகள்

விரைவில் எனக்கு காதல் திருமணம் -நடிகர் ஆதி

திருமணம் குறித்து ஆதியிடம் கேட்டபோது, “விரைவில் எனது திருமண அறிவிப்பு வரும். காதல் திருமணம் செய்து கொள்வேன். அது இருவிட்டார் சம்மதத்துடன் நடக்கும் என தெரிவித்தார்.

நடிகர் ஆதியும், நடிகை நிக்கி கல்ராணியும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு இருவரும் விளக்கம் அளிக்கவில்லை. இந்நிலையில், திருமணம் குறித்து ஆதியிடம் கேட்டபோது, விரைவில் எனது திருமண அறிவிப்பு வரும். காதல் திருமணம் செய்து கொள்வேன். அது இருவிட்டார் சம்மதத்துடன் நடக்கும்.

திருமணம் பற்றிய முறையான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்றார். மேலும் ஆதி கூறும்போது, ஒரு கால் இழந்த கதாபாத்திரத்தில் கிளாப் படத்தில் நடித்தது திரில்லாக இருந்தது மன அழுத்தத்துடன் கூடிய நபரின் கதாபாத்திரம். லிங்குசாமி இயக்கத்தில் வாரியர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறேன்.

எனக்கு நானே சவால் விடும் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். நான் நடித்துள்ள பார்ட்னர் முழுக்க நகைச்சுவை திரைப்படம். திரையரங்கிற்கு மக்கள் இன்னும் முழுதாக வர ஆரம்பிக்கவில்லை. ஓ.டி.டி.யில் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு படத்திற்கு திரையரங்கம் நிறைந்திருந்ததைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. நான் நடித்த மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் வரும். அதற்கான வேலை நடக்கிறது என்றார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு