சினிமா செய்திகள்

விரைவில் 'எம்.குமரன் - 2ம் பாகம்'... ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த மோகன் ராஜா...!

எம்.குமரன் படத்தின் 2ம் பாகத்தை இயக்க மோகன் ராஜா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கடந்த 2004ம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் 'எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி'. இந்த திரைப்படத்தில் நதியா, அசின், பிரகாஷ் ராஜ், விவேக் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார்.

இந்த படம் தெலுங்கில் ரவிதேஜா நடிப்பில் வெளியான 'அம்மா நன்னா ஒ தமிழா அம்மயி' படத்தின் ரீமேக் என்றாலும் தமிழில் மிகப்பெரிய வெற்றி படமாக இது அமைந்தது. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று குடும்ப ரசிகர்களை கவர்ந்து பல நாட்கள் ஹவுஸ் புல் காட்சிகளாக திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் மோகன் ராஜா படத்தின் கதையை முழுவதுமாக எழுதி முடித்துள்ளதாகவும், தனி ஒருவன் -2ம் பாகம் வெளியான பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த படத்திலும் ஜெயம் ரவி நாயகனாக நடிக்க உள்ளதாகவும், விரைவில் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த படத்தில் நடிகை நதியா கதாபாத்திரம் இடம்பெறாது என்று மோகன் ராஜா கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்