சினிமா செய்திகள்

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சென்னை

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சூர்யா தனது சொந்தக் குரலில் பாடியுள்ள ஊர்க்குருவி பருந்தாகுது பாடல் இடம்பெற்றுள்ளது. மேலும் கதைப்படி சூர்யா பேசும் எதார்த்தமான வசனங்களும் அதிகம் இடம்பெற்றுள்ளன.

இறுதிச்சுற்று படத்துக்குப் பின்னர் சுதா கொங்கரா - சூர்யாவை வைத்து படம் இயக்கியிருப்பதால் இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்