கோப்புப் படம் 
சினிமா செய்திகள்

டுவிட்டரில் இணைந்தார் இயக்குனர் சுதா கொங்கரா..!

இயக்குனர் சுதா கொங்கரா டுவிட்டரில் இணைந்துள்ளார்.

சென்னை,

இயக்குனர் சுதா கொங்கரா, கடைசியாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற 'சூரரைப்போற்று' திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது சூரரைப்போற்று திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. அதற்கான பணிகளில் சுதா கொங்கரா ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா, டுவிட்டரில் இணைந்துள்ளார். தன்னுடைய அதிகார்ப்பூர்வ டுவிட்டர் கணக்கை நேற்று தொடங்கியுள்ளார். கணக்கை தொடங்கிய அவர் முதல் பதிவாக, 'வணக்கம். இது என்னுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு. அவ்வளவுதான்' என்று பதிவிட்டுள்ளார்.

டுவிட்டர் கணக்கு தொடங்கி ஒரு நாளுக்குள்ளாக, சுமார் 37 ஆயிரத்து 800 பேர் டுவிட்டரில் சுதா கொங்கராவை பின்தொடர ஆரம்பித்துள்ளனர். சுதா கொங்கரா யாரையும் பின்தொடரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் தன்னுடைய அடுத்த படங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.