சினிமா செய்திகள்

“படையப்பா” ரீ-ரிலீஸ் குறித்து அப்டேட் வெளியிட்ட சவுந்தர்யா ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் நடித்த ‘படையப்பா’ திரைப்படம் வரும் 12ம் தேதி ரீ-ரிலீஸாகிறது.

தினத்தந்தி

சென்னை,

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள். அண்மையில் புதிய திரைப்படங்களை தாண்டி ரீ-ரிலீஸ் செய்யப்படும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதன்படி கில்லி, பில்லா, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்கள் ரீ-ரிலிஸ் ஆனது. அதிலும் கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸிலும் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான படையப்பா படம் மீண்டும் ரீ-ரிலீஸாக உள்ளது. 1999-ல் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி கணேசன், சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், நாசர், ராதாரவி, லெட்சுமி. ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரஜினியின் அதிரடி நடிப்பு, ஸ்டைல் மற்றும் ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ரஜினி சினிமாவில் நடிக்க வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதை கொண்டாடும் விதமாக படையப்பா படம் இந்த ஆண்டு திரைக்கு வருவதாக இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் தெரிவித்திருந்தார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் வரும் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. 75வது பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் அவரது இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே, ரஜினியின் பிறந்தநாள் அன்று படையப்பா ரீ-ரிலீஸ் செய்யப்போவதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ரஜினியின் பிறந்தநாளான வரும் 12ம் தேதி அன்று சூப்பர் ஹிட் திரைப்படமான படையப்பா 4கே தரத்தில் வெளியாக இருப்பதாக சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி

மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்