சினிமா செய்திகள்

'ஸ்பைடர் மேன் 4': கதாநாயகியை மாற்ற படக்குழு முடிவா?

ஸ்பைடர் மேன் 4 குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது

தினத்தந்தி

சென்னை,

இந்தியாவில், ஹாலிவுட் படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் குறிப்பாக, மார்வெல் படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் மார்வெல் படைப்புகளுள் ஒன்றாக உருவானதுதான், ஸ்பைடர் மேன் படங்கள்.

இதன் முதல் பாகமான ஸ்பைடர் மேன்: ஹேம் கம்மிங்கில் டாம் ஹாலண்ட் கதாநாயகனாக நடித்திருந்தார், அதனைத்தொடர்ந்து, ஸ்பைடர் மேன் பார் பிரம் ஹேம் படமும், கடைசியாக 3-வது பாகமாக ஸ்பைடர் மேன் நே வே ஹேம் படமும் வெளியானது. இப்படங்களில் கதாநாயகியாக ஜெண்டயா நடித்திருந்தார். இந்த 3 பாகங்களையும் ஜான் வாட்ஸ் இயக்கி இருந்தார்.

இதனையடுத்து 4-வது பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், 4-வது பாகம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தில் கதாநாயகியையும், இயக்குனரையும் மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனர் டேனியல் க்ரெட்டனுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு