சென்னை,
’ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை (மார்ச் 18) வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜூலை 31ல் திரைக்கு வரவுள்ள இப்படம், நோ வே ஹோம் முடிவுக்குப் பிறகு, பீட்டர் பார்க்கரின் வாழ்க்கையில் ஏற்படும் புதிய திருப்பங்களை இப்படம் விவரிக்கும் என கூறப்படுகிறது.
ஸ்பைடர் மேன் முதல் பாகமான ’ஸ்பைடர் மேன்: ஹேம் கம்மிங்’கில் டாம் ஹாலண்ட் கதாநாயகனாக நடித்திருந்தார், அதனைத்தொடர்ந்து, ’ஸ்பைடர் மேன் பார் பிரம் ஹேம்’ படமும், கடைசியாக 3-வது பாகமாக ’ஸ்பைடர் மேன் நோ வே ஹேம்’ படமும் வெளியாகின. இந்த 3 பாகங்களையும் ஜான் வாட்ஸ் இயக்கி இருந்தார்.
இதனையடுத்து 4-வது பாகமான 'ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே' உருவாகி இருக்கிறது. இதனை டெஸ்டின் டேனியல் இயக்கி உள்ளார்.