சென்னை,
பிரபல நடிகர் பிரபாஸ் தற்போது பல படங்களில் பிஸியாக உள்ளார். ஒருபுறம் ‘பௌஜி’, மற்றொரு புறம் ‘ஸ்பிரிட்’ ஆகிய படங்களின் நடித்து வருகிறார். இதில் ‘ஸ்பிரிட்’ படத்துக்கு அதிக ஹைப் உள்ளது.
இந்த ஆக்சன் திரில்லர் படத்தை இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்குகிறார். பாலிவுட் நடிகை திரிப்தி டிம்ப்ரி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் விவேக் ஓபராய், காஞ்சனா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இந்த படத்திலிருந்து விவேக் ஓபராயின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரில் அவர் இதுவரை காணாத ஸ்டைலிஷ் லுக்கில் தோன்றுகிறார். மேலும், அவருடன் ஒரு பெண்ணும் தோன்றியிருந்தார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
போஸ்டரில் உள்ள அந்த பெண் நடிகை ஐஸ்வர்யா தேசாய். இந்திய-அமெரிக்க நடிகையான இவர், விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ‘கல்லி பாய்’ மற்றும் ‘ராட் இன் த கிச்சன்’ குறும்படத்தின் மூலம் பிரபலமானார். அந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார்.
இப்போது ‘ஸ்பிரிட்’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார். ஏற்கனவே நட்சத்திரங்களால் நிரம்பிய இந்த படத்தில் ஐஸ்வர்யா தேசாய் இணைந்திருப்பது புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.