சினிமா செய்திகள்

கிரிக்கெட் வீரருடன் காதலா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா

சமூக வலைத்தளங்களில் பரவி வந்த காதல் வதந்திகளுக்கு ஸ்ரீலீலாவின் தாயார் முற்றுப்புள்ளிவைத்துள்ளார்.

ஐதராபாத்,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி இளம் நடிகையான ஸ்ரீலீலா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரர் திலக் வர்மா ஆகிய இருவரையும் இணைத்து, கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்த காதல் வதந்திகளுக்கு நடிகையின் தாயார் முற்றுப்புள்ளிவைத்துள்ளார்.

சமீபகாலமாகவே சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ரீலீலாவும், கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக பல்வேறு செய்திகள் உலா வரத் தொடங்கின. இந்த விவகாரம் காட்டுத்தீ போல் பரவிய நிலையில், இதற்கு ஸ்ரீலீலாவின் தாயார் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

இது குறித்து அவர் பேசுகையில், "சமூக வலைத்தளங்களில் உலா வரும் இந்த செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை. இப்படியெல்லாம் எப்படி கதைகளை உருவாக்குகிறார்கள் என்றே எனக்குப் புரியவில்லை. இந்த வதந்திகளில் ஒரு சதவீதம்கூட உண்மை இல்லை" என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

SCROLL FOR NEXT