சினிமா செய்திகள்

இயக்குனரை அறிமுகம் செய்து வைப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த எழுத்தாளர் - ஸ்ரீ ரெட்டி குற்றச்சாட்டு

இயக்குனர் விவி விநாயக்கை அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று கூறி எழுத்தாளர் கோனா வெங்கட் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

ஐதராபாத்

பிரபல தெலுங்கு எழுத்தாளர் ஒருவரின் லீலையை வெளியிடப் போவதாக நடிகை ஸ்ரீ ரெட்டி அறிவித்திருந்தார். பெண்களை ஓட விட்டு துரத்திப் பிடித்து உறவு கொண்டால் தான் அவருக்கு திருப்தி ஏற்படும் என்றார் ஸ்ரீ ரெட்டி.

இந்நிலையில் அந்த எழுத்தாளர் யார் என்பதை தெரிவித்துள்ளார் அவர்.

பிரபல இயக்குனர் விவி விநாயக்கை அறிமுகம் செய்து வைக்கிறேன், கெஸ்ட் ஹவுஸுக்கு வா என்று பிரபல எழுத்தாளர் கோனா வெங்கட் அழைத்தார். ஆனால் அங்கு சென்றபோது விநாயக் இல்லை என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

கெஸ்ட் ஹவுஸுக்கு சென்ற பிறகு கோனா வெங்கட் கட்டாயப்படுத்தி உறவு கொண்டார். வரும் நாட்களில் மேலும் இரண்டு பெரிய பிரபலங்களின் பெயர்களை வெளியிடுவேன் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.

அந்த 2 பிரபலங்களின் பெயர்களை தற்போதே வெளியிட்டால் மக்கள் குழம்பி விடுவார்கள். அதனால் ஒவ்வொருத்தரின் பெயராக வெளியிடுகிறேன் என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ரெட்டியின் புகாரை கேட்டு கோனா வெங்கட் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்று அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை