சினிமா செய்திகள்

ஸ்ரீகாந்த் நடித்த சஸ்பென்ஸ் திகில் படம் ‘தி பெட்’

ஸ்ரீகாந்த் தற்போது ஒரு சஸ்பென்ஸ் திகில் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அந்த படத்தின் பெயர், ‘தி பெட்.’ மணிபாரதி இயக்கி இருக்கிறார். வி.விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார் ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர்.

தினத்தந்தி

ஸ்ரீகாந்த் ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடித்து இருக்கிறார். ஜான் விஜய், பிளாக் பாண்டி, தேவிப்ரியா, மலையாள நடிகை திவ்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.

படத்தின் கதையை பற்றி டைரக்டர் மணிபாரதி கூறியதாவது:-

ஸ்ரீகாந்தும், அவருடைய நண்பர்களும் ஊட்டிக்கு உல்லாச பயணம் போகிறார்கள். அங்கு ஒரு கொலை நடக்கிறது. அதைத்தொடர்ந்து ஸ்ரீகாந்துக்கு ஏற்படும் சிக்கல்கள்தான் கதை. ஸ்ரீகாந்த் ஐ.டி. கம்பெனியில் வேலை செய்பவராக நடித்து இருக்கிறார். அவருடைய திரையுலக பயணத்தில், இது முக்கியமான படமாக இருக்கும்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை