சினிமா செய்திகள்

’கேஜிஎப்’ நடிகைக்கு குவியும் வாய்ப்பு...

கேஜிஎப் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி.

தினத்தந்தி

சென்னை,

ஸ்ரீநிதி ஷெட்டிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது அவர் தனது அடுத்த தெலுங்கு படத்தில் கையெழுத்திட்டுள்ளார். இந்த முறை அவர் நடிகர் வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை திரிவிக்ரம் இயக்குகிறார்.

வெங்கடேஷும் திரிவிக்ரமும் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை. ஸ்ரீநிதி ஷெட்டியின் பிறந்தநாளை(நேற்று) முன்னிட்டு, படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டது.

கேஜிஎப் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, நானிக்கு ஜோடியாக ஹிட் 3 படத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமானார். சமீபத்தில் தெலுசு கடா படத்தில் நடித்திருந்தார். இது அவரது மூன்றாவது தெலுங்கு படமாகும்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து