சினிமா செய்திகள்

இயக்குநர் அவதாரம் எடுத்த ராம் பொதினேனி - கதாநாயகியாக ’கேஜிஎப்’ நடிகை?

இத்திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கு திரையுலகின் இளம் நடிகரான ராம் பொதினேனி , தனது புதிய திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்து ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை ராம் பொதினேனியே எழுதியுள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க 'கே.ஜி.எப்' புகழ் ஸ்ரீநிதி ஷெட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. ஸ்ரீநிதி ஷெட்டி தற்போது வெங்கடேஷ் மற்றும் திரிவிக்ரம் கூட்டணியில் உருவாகி வரும் 'ஆதர்ஷ குடும்பம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இத்திரைப்படம், டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. நடிகராக முத்திரை பதித்த ராம் பொதினேனி, தற்போது இயக்குநர் நாற்காலியில் அமரவுள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT