மெகா பட்ஜெட்டில் தயாராகி வரும் ரஜினிகாந்தின் 2.0 படத்தின் முக்கிய காட்சிகள் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் டிரெய்லரை உருவாக்கி விரைவில் சமூக வலைத்தளத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் முன்னதாகவே அந்த டிரெய்லரை யாரோ திருடி இணையதளத்தில் வெளியிட்டு விட்டனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியாகி வேறு வழியின்றி அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் செய்தார்கள்.
துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமுடன் ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆகியோரும் நடிக்கின்றனர். கவுதம் மேனன் இயக்குகிறார். இவரது டைரக்ஷனில் ஏற்கனவே மின்னலே, காக்க காக்க, விண்ணைத்தாண்டி வருவாயா உள்பட பல படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நடந்துள்ளது. இப்போது இறுதி கட்ட படப்பிடிப்பு நடக்கிறது.