சினிமா செய்திகள்

விஜய் - திரிஷா குறித்து சுசித்ராவின் சர்ச்சை கருத்து: பதிலடி கொடுத்த திரிஷா

சுசித்ராவின் பேச்சு சர்ச்சையான நிலையில், திரிஷாவின் சமூக வலைதள பதிவு சுசித்ராவுக்கான பதிலா? என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சென்னை,

கடந்த சில நாட்களுக்கு முன்னாள் விஜய் மற்றும் திரிஷா குறித்து பாடகி சுசித்ரா சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த நிலையில் அந்த கருத்துக்கு நடிகை திரிஷா மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் பிறந்தநாளன்று நடிகை திரிஷா தனது சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படம் சர்ச்சைக்குரிய வகையில் மாறியது என்பதும் இது குறித்து பாடகி சுசித்ரா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்து நடிகை திரிஷா தனது எக்ஸ் தள பதிவில், மற்றவர்கள் சொல்வதைப் பற்றி கவலைப்பட வேண்டாம், நீங்கள் ஏதேனும் ஒன்றை தவிர்க்க நினைத்தால் உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டு கொள்ளாதீர்கள்' என பதிவிட்டுள்ளார்.

சுசித்ராவின் பேச்சு சர்ச்சையான நிலையில், திரிஷாவின் சமூக வலைதள பதிவு சுசித்ராவுக்கான பதிலா? என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...