சினிமா செய்திகள்

`பான்' இந்தியா படத்தில் சுதீப்

தினத்தந்தி

தமிழில் `நான் ஈ' படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான கிச்சா சுதீப் கன்னடத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். தற்போது தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் புதிய படத்தில் சுதீப் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை ஆர்.சந்துரு டைரக்டு செய்கிறார். `பாகுபலி', `மதீரா', `ஆர்.ஆர்.ஆர்.' உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை எழுதிய பிரபல கதாசிரியரான விஜயேந்திர பிரசாத் மேற்பார்வையில் இந்தப் படத்துக்கான திரைக்கதை தயாராகி உள்ளது.

படத்தை ஆர்.சி. ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. அதிக பொருட் செலவில் பிரமாண்ட படமாக தயாராகிறது. விஜயேந்திர பிரசாத் மேற்பார்வை, சுதீப் நடிப்பு, ஆர். சந்துரு இயக்கம் ஆகிய 3 பேர் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை ஒட்டுமொத்த திரையுலகமும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது என்றும், இந்த வருடத்தின் பெரிய வெற்றிப்படமாக இது அமையும் என்றும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். பான் இந்தியா படத்துக்கான கருவை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது என்றும் அவர்கள் கூறினர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை