சினிமா செய்திகள்

விவாகரத்தால் வந்த தற்கொலை எண்ணம் - அலைபாயுதே பட நடிகை

மன அழுத்தத்துக்காக 2 மாதம் மருந்து-மாத்திரைகள் எடுத்துக்கொண்டேன். இப்போது நன்றாக இருக்கிறேன் என்கிறார் சொர்ணமால்யா.

தினத்தந்தி

பரதநாட்டிய கலைஞரான சொர்ணமால்யா தற்போது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்தநிலையில் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து சொர்ணமால்யா மனம் திறந்தார். அவர் கூறும்போது, "21 வயதிலேயே எனக்கு திருமணம் நடந்தது. என் கணவருக்கு வயது 25. அந்த வயதில் எது சரி, தவறு? என்று எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் திருமணம் என்பது சரியாக அமையவில்லை.

எனவே அதில் இருந்து வெளியே வரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். வலியும், வேதனையும் எனக்கு இருந்தது. பெற்றோர் நடத்தி வைத்த திருமணம் என்பதால், அவர்களுக்கு தான் குற்ற உணர்ச்சி இருந்தது.

அந்த சமயத்தில் நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். தற்கொலை செய்துகொள்ளலாம் என்றும் தோன்றியது. அதன் பிறகு என் தங்கை என்னை டாக்டரிடம் அழைத்து சென்றார். மன அழுத்தத்துக்காக 2 மாதம் மருந்து-மாத்திரைகள் எடுத்துக்கொண்டேன். இப்போது நன்றாக இருக்கிறேன். எது எப்படியோ, என் வாழ்க்கையில் நடந்த நல்லது, கெட்டது என அனைத்தும் பொது பார்வைக்கு வந்துவிட்டது" என்றார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது