சினிமா செய்திகள்

தற்கொலை வழக்கில் திருப்பம்: சுஷாந்த் சிங் காதலி கைதாவாரா?

தற்கொலை வழக்கில் திருப்பமாக, சுஷாந்த் சிங் காதலி கைதாவாரா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை கதையில் நடித்து பிரபலமான இளம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் சமீபத்தில் தற்கொலை செய்த சம்பவம் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்தாலும் தனக்கு வந்த படவாய்ப்புகளை அவர்கள் தடுத்ததாலும் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து 35-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக சுஷாந்த் சிங் தற்கொலைக்கு அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி காரணம் என்று சுஷாந்த் சிங் தந்தை பாட்னா போலீசில் புகார் அளித்துள்ளார். சுஷாந்த் சிங் கிரடிட் கார்டை பயன்படுத்தி ரியா சக்கரவர்த்தி பணம் எடுத்துள்ளார் என்றும் சுஷாந்த் சிங் கணக்கில் இருந்து ரூ.15 கோடியை வேறு ஒரு கணக்குக்கு மாற்றி உள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ளார். ரியாவும் இன்னும் சிலரும் சேர்ந்து மன ரீதியாக அவருக்கு தொல்லை கொடுத்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதையடுத்து ரியா சக்கரவர்த்தி மீது பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்த தனிப்படை மும்பை விரைந்துள்ளது. இதனால் ரியா சக்கரவர்த்தி கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அவர் முன் ஜாமீன் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை