சினிமா செய்திகள்

சுந்தர்.சி, அனுராக் காஷ்யப் நடிக்கும் 'ஒன் 2 ஒன்' படத்தின் முதல் பாடல் வெளியானது..!

இந்த பாடலை விஜய் சேதுபதி மற்றும் சுந்தர்.சி இணைந்து பாடியுள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

இயக்குனர் கே.திருஞானம் இயக்கத்தில் சுந்தர்.சி நாயகனாகவும், பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடிக்கும் திரைப்படம் 'ஒன் 2 ஒன்'. இந்த படத்தில் விஜய் வர்மன், நீது சந்திரா, ராகினி திவேதி, பேபி மானஸ்வி, ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். எஸ்.கே.ஏ.பூபதி கார்த்திக், பிரவீன் நித்தியானந்தம், விக்ரம் மோகன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சி.எஸ் பிரேம் குமார் படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. அதன்படி, 'சிங்கம் சிறுத்தை' என்ற பாடலை இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். மோகன் ராஜன் எழுதியுள்ள இந்த பாடலை விஜய் சேதுபதி மற்றும் சுந்தர்.சி இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை