சென்னை,
தன் மகன் நடித்த “பார்டர் 2” படம் ரூ. 200 கோடி வசூலைக் கடந்தபோதிலும், சுனில் ஷெட்டி இன்னும் அதை பார்க்கவில்லை.
சன்னி தியோல், தில்ஜித் டோசன்ஜ், வருண் தவான் மற்றும் சுனில் ஷெட்டி மகன் அஹான் ஷெட்டி நடித்த “பார்டர் 2” படம் இதுவரை ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
நல்ல வரவேற்பு கிடைத்தபோதிலும், நடிகர் சுனில் ஷெட்டி இன்னும் படத்தை பார்க்கவில்லை. பிரீமியர் நிகழ்ச்சியிலும், அவரது குடும்பத்தினர் படம் பார்க்கும்போது சுனில் ஷெட்டி தியேட்டர் வெளியே இருந்தார்.
இதனைப் பற்றிப் சுனில் ஷெட்டி பேசுகையில், “பார்டர் 2 படம் உலகளவில் ரூ. 500 கோடி வசூலைத் தாண்டும் வரை பார்க்க மாட்டேன் என்றும் தியேட்டருக்கு வெளியே மூன்றரை மணி நேரம் இருந்து மக்களின் பாராட்டுகளை பெற்று மகிழ்ந்ததாகவும் கூறினார்.