சினிமா செய்திகள்

சன்னி லியோனின் ஒய் சவாலை ஏற்ற சுருதிஹாசன்...! வைரலாகும் வீடியோ!

சன்னி லியோன் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி புகைப்படங்களை பதிவேற்றி வரும் இவர், தற்போது சவால் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சென்னை

சமூக வலைத்தளங்களில் பலரும் ஒவ்வொரு செயல்களை செய்து அதை போல் மற்றவரும் செய்ய சவால் விடுத்து வருகின்றனர். வொர்க் அவுட் செய்வது, நடனம் ஆடுவது, சாப்பிடுவது என்று பல சவால் டிரெண்டாகி வருகிறது, இதனை பல பிரபலங்களும் செய்து வருகின்றனர். ந்த வகையில் பிரபல நடிகை சன்னி லியோன் செய்திருக்கும் சவால் பயங்கர டிரெண்டாகி உள்ளது. பாலிவுட் நடிகையான சன்னி லியோன் தற்போது சில தமிழ் படங்களில் நடித்து வருகிறார், இவரது நடிப்பில் ஓ மை கோஸ்ட் என்கிற படம் வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. மேலும் நடிகை சன்னி லியோன் தெலுங்கு படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார், விரைவில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

சன்னி லியோன் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி புகைப்படங்களை பதிவேற்றி வரும் இவர், தற்போது சவால் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தலைகீழாக நின்று ஆங்கில எழுத்தான 'ஒய்' வடிவத்தில் நிற்பது போன்ற போஸ் கொடுத்துள்ளார், இந்த வீடியோவை பதிவேற்றிய அவர் இதனை போல மற்றவர்களையும் செய்ய சொல்லி சேலஞ்ச் செய்து இருக்கிறார். இவரது வொர்க் அவுட் சேலஞ்சை ஏற்றுக்கொண்டு இணையாவாசிகள் பலரும் இதே போல செய்து டிரெண்டாக்கி வந்தனர்.

இந்நிலையில் நடிகை சுருதி ஹாசன் சன்னி லியோனின் சவாலை ஏற்றுக்கொண்டு டிரெண்டிங் வரிசையில் சேர்ந்து இருக்கிறார். சன்னி லியோன் போலவே கருப்பு நிறத்தில் உடை அணிந்துகொண்டு அழகாக 'ஒய்' வடிவத்தில் போஸ் கொடுத்துள்ளார். இந்த 'ஒய் சவாலை' பலரும் ஏற்றுக்கொண்டு செய்து வரும் நிலையில், தற்போது சுருதிஹாசன் செய்திருப்பது மேலும் டிரெண்டாகியுள்ளது. தற்போது நடிகை சுருதிஹாசன் பிரபாஸ் உடன் சலார் படத்தில் நடித்து வருகிறார்.

View this post on Instagram

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை