சினிமா செய்திகள்

குறி வச்சா..இரை விழனும்: 'வேட்டையன்' படத்தின் டப்பிங் பணியில் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்தின் டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை 'ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். இதில், அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் அக்டோபர் மாதம் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இதன் டப்பிங் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் ஆகியோர் தங்களுடைய டப்பிங் பணிகளை முடித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்தான வீடியாவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதனுடன், 'குறி வச்சா..இரை விழனும், டப்பிங் பணியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,' என்றும் பதிவிட்டிருக்கிறது.

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி