சினிமா செய்திகள்

பெரும் முயற்சியுடன் வரும் சிறு படங்களை ஆதரியுங்களேன் -பார்த்திபன் பதிவு

2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான முயற்சியாக அப்போது பார்க்கப்பட்டது.

தினத்தந்தி

12-ம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடித்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கினார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். 2010-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான முயற்சியாக அப்போது பார்க்கப்பட்டது.

தமிழில் ஒரு புதிய கதைக் களத்தைப் படைத்த செல்வராகவன் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்தன. இப்படி பல பாராட்டுகளை இப்படம் பெற்றாலும் அப்போது வசூல் ரீதியாக சற்று சரிவை சந்தித்ததாக கூறப்பட்டது. பின்னர், பல வருடங்களுக்கு பிறகு ரசிகர்கள் பலரும் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தை பாராட்டி பதிவிட்டனர்.

இதைத்தொடர்ந்து 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதில், தனுஷ் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தை 2024-ம் ஆண்டு வெளியிடப்போவதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். என்ன சொல்லனும் என்று தெரியல ரொம்ப கஷ்டமா இருக்கு. மன்னிப்பு மட்டும் தான் கேட்க முடியும்" என்று பதிவிட்டிருந்தார். இதற்கு நடிகர் பார்த்திபன், "அதற்கு பதில் … பெரும் முயற்சியுடன் வரும் சிறு படங்களை முதல் நாள் பார்த்து ஆதரியுங்களேன்" என்று பதிலளித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்