சினிமா செய்திகள்

“தனுஷ் 54” படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ்

நடிகர் தனுஷின் 54வது படத்தில் தனது படப்பிடிப்பை முடித்ததாக மலையாள நடிகர் சுராஜ் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

போர் தொழில் பட இயக்குனர் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனது 54வது படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக டி54 என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இந்த படம் பிரமாண்டமான பெருட்செலவில், பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் திரில்லராக உருவாகியுள்ளது.

இப்படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தை அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தனது படப்பிடிப்பை முடித்ததாக, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு புகைப்படங்களுடன் தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்