சென்னை,
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா, 10 மொழிகளில் வெளியாக உள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தன. 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பை நடிகர் சூர்யா சமீபத்தில் நிறைவு செய்தார். சமீபத்தில் இப்படத்தின் 2-வது லுக் போஸ்டர் வெளியானது.
இந்த நிலையில் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு நடிகர் சூர்யா, கங்குவா படத்தின் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
View this post on Instagram