சினிமா செய்திகள்

மீண்டும் ரிலீசாகும் சூர்யாவின் "அஞ்சான்" திரைப்படம்

அஞ்சான் படத்தை ரீ-எடிட் செய்து விரைவில் வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2014- ம் ஆண்டு வெளியான படம் 'அஞ்சான்'. இத்திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கியிருந்தார். இந்த படத்தினை 'திருப்பதி பிரதர்ஸ்' நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் சமந்தா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் வித்யூத் ஜம்வால், சூரி, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கமர்ஷியல் படமாக வெளிவந்த அஞ்சான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆன நிலையில் படத்தை ரீ ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில், அஞ்சான் படத்தை ரீ-எடிட் செய்து விரைவில் வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் அறிவித்துள்ளது. 'பாட்ஷா', 'வேட்டையாடு விளையாடு', 'கேப்டன் பிரபாகரன்', 'சச்சின்', 'வாரணம் ஆயிரம்', ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பு பெற்றதை தொடர்ந்து "அஞ்சான்" படமும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை