சினிமா செய்திகள்

சுருதிஹாசனின் ஆசைகள்

வாழ்க்கையில் எல்லா விஷயங்களையும் கற்றுக்கொண்டு நிதானமாக பயணம் செய்ய வேண்டும் என்பதுதான் எனது முடிவு என நடிகை சுருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகை சுருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

நான் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிக்கிறேன். இந்தியிலும் நடித்துள்ளேன். எனக்கு தென்னிந்திய படங்களில் நடிக்கத்தான் ஆர்வம். இந்திக்கு வர விருப்பமில்லை என்று சிலர் பேசுகின்றனர். அதில் உண்மை இல்லை. எல்லா மொழி படங்களிலும் நடிக்க ஆசை உள்ளது. இந்தி படங்களில் நடிக்கவில்லை என்பதால் எனக்கு வாய்ப்புகள் வரவில்லை என்றோ இந்தி படங்களை விட்டு விட்டேன் என்றோ அர்த்தம் இல்லை. வேறு மொழிகளில் நடித்துக்கொண்டு இருக்கிறேன்.

அவ்வளவுதான். வாழ்க்கையில் எல்லா விஷயங்களையும் கற்றுக்கொண்டு நிதானமாக பயணம் செய்ய வேண்டும் என்பதுதான் எனது முடிவு. எனக்கு ஆசைகள் அதிகம். இன்னும் புதிது புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும். இன்னும் புதிது புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. என்னை இன்னும் மெருகேற்றும் முயற்சிகள் செய்கிறேன். இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்றுதான் மனதில் தோன்றுகிறது.

இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்