சினிமா செய்திகள்

தெலுங்கு பதிப்பிற்கு சொந்த குரலில் டப்பிங் பேசிய சூர்யா..!

நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு தன்னுடைய சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. கொரோனா பாதிப்பினால் தள்ளிப்போன எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தற்போது வருகிற மார்ச் மாதம் 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளன.

இந்த நிலையில் நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பில் தன் சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார். இந்த திரைப்படத்தை தயாரித்துள்ள சன்பிக்சர்ஸ் நிறுவனம் நடிகர் சூர்யா தெலுங்கு பதிப்பிற்கு டப்பிங் பேசும் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இதை தெரிவித்துள்ளது.

கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் சத்தியராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவ தர்ஷினி, ஜெயபிரகாஷ், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து