சினிமா செய்திகள்

சூர்யா நெகிழ்ச்சி

தினத்தந்தி

கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா ஜோடியாக நடித்து 2003-ல் வெளியான காக்க காக்க படம் பெரிய வெற்றியை பெற்றது. சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனை படமாகவும் அமைந்தது. இதில் போலீஸ் அதிகாரியாக சூர்யா நடித்து இருந்தார். அதிரடி சண்டை படமாக உருவாகி இருந்தது.

இந்த படம் வெளியாகி 20 வருடங்கள் ஆனதையொட்டி சூர்யா அந்த படம் தொடர்பான நினைவுகளை பகிர்ந்துள்ளார். ஜோதிகா மற்றும் படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள சூர்யா அதில், நெகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ள பதிவில், "காக்க காக்க அனைத்தையும் எனக்கு கொடுத்த படம். இந்த படத்தில் நடித்த அன்புச் செல்வன் கதாபாத்திரம் எப்போதும் என் மனதுக்கு நெருக்கமான ஒன்று ஆகும்.

ஜோதிகாதான் இந்த படம் குறித்து முதலில் என்னிடம் பேசினார். இயக்குனர் கவுதம்மேனன் மற்றும் சக நடிகர்கள், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு நன்றி. இந்த படத்தில் எனக்கு நிறைய நல்ல நினைவுகள் உள்ளன'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை