புதுடெல்லி:
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு தொடர்பான போதைப்பொருள் ஊழல் வழக்கில் ரியா சக்ரபோர்த்தி, சகோதரர் ஷோயிக் மற்றும் 4 பேரின் ஜாமீன் மனுவை இன்று மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆதாரங்களின்படி, போதைப்பொருள்தடுப்பு போலீசார் விசாரணையின் போது, ரியா சக்ரபோர்த்தி போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் மற்றும் கொள்முதல் செய்தவர்கள் என சில பாலிவுட் பிரபலங்களின் பெயர்களை கூறி உள்ளார். இதை தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட பாலிவுட் பிரபலங்கள் போதைப்பொருள் தடுப்பு போலீசாரின் கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் பி வகை நடிகர்கள் என்பது கூறப்படுகிறது.
மற்றொரு முக்கியமான விவரம் என்னவென்றால், ஊரடங்கு காலத்தில், ஒரு கூரியர் மூலம் சுஷாந்தின் வீட்டிலிருந்து ரியாவின் இல்லத்திற்கு ஒரு கூரியர் அனுப்பப்பட்டது. அதில் அரை கிலோ போதைப்பொருள் இருந்து உள்ளது.
கூரியர் சிறுவனிடமிருந்து ஷோயிக் கூரியரை வாங்கியதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த கூரியர் ஏப்ரல் மாதத்தில் அனுப்பப்பட்டது.
சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காக, சில வீட்டுப் பொருட்களும் அந்த கூரியர் பாக்கெட்டில் போதைப்பொருளுடன் அனுப்பப்பட்டது.
கூரியர் சிறுவன் உண்மையில் தீபேஷ் சாவந்த் மற்றும் ஷோயிக் சக்ரபோர்த்தி ஆகியோரை அடையாளம் காட்டினான். மேலும், கூரியர் சிறுவனின் தொலைபேசி அழைப்பு விவரங்கள் ஷோயிக் மற்றும் தீபேஷ் ஆகியோரிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டன.
இதற்கிடையில், ரியா மற்றும் மற்ற 5 குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனுக்காக மும்பை ஐகோர்ட்டை நாட வாய்ப்புள்ளது.