சினிமா செய்திகள்

’யூபோரியா சீசன் 3’...படப்பிடிப்பை முடித்த சிட்னி ஸ்வீனி

இந்த வெப் தொடர் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கடந்த பிப்ரவரியில் தொடங்கிய யூபோரியா சீசன் 3-ன் படப்பிடிப்பை சுமார் 9 மாதங்களுக்கு பிறகு சிட்னி ஸ்வீனி முடித்துள்ளார். கதைக்களம் பற்றிய எந்த விவரங்களையும் வெளியிடாமல் கவனமாக இருந்த ஸ்வீனி, தற்போது இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் யூபோரியா சீசன் 3-ன் படப்பிடிப்பை முடித்ததாக அவர் கூறினார். படப்பிடிப்பு இப்போது முடிவடைந்துள்ளதால், 2026 ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இந்த வெப் தொடர் போஸ்ட் புரொடக்சன் பணிகளை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் இரண்டாவது சீசன் 2022 ஆம் ஆண்டு வெளியானது. தற்போது 3-வது சீசன் 4 ஆண்டுகளுக்கு பிறகு வருகிறது.

இதில் ஜெண்டயா மீண்டும் ரூ பென்னட்டாக நடிக்கிறார். மேலும், ஜேக்கப் எலோர்டி, ஹண்டர் ஷாபர், அலெக்சா டெமி, மௌட் அபடோவ் மற்றும் எரிக் டேன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்