தமிழில் வெளிவந்த 'ஆடுகளம்' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் டாப்சி. 'காஞ்சனா', 'வந்தான் வென்றான்', 'கேம் ஓவர்', 'அனபெல் சேதுபதி' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்தியிலும் பல படங்களில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் ஒரு பட தயாரிப்பு நிறுவனத்தை டாப்சி தொடங்கினார். இப்போது ஒரு புதிய படத்தை தயாரிக்க இருக்கிறார். இந்த படத்தில் சமந்தா தான் கதாநாயகி என்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படம் என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.