மும்பை,
நடிகை தமன்னா மற்றும் ஜுனைத்கான், தயாரிப்பாளர் எக்தா கபூர் தயாரிக்கும் திகில் திரைப்படத் தொடரின் புதிய பகுதியாக உருவாகும் ராகினி 3 படத்தில் நடிக்க உள்ளதாக முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த படம், திகில், நகைச்சுவை மற்றும் காதல் கலந்த “டேட் நைட் ஹாரர்” வடிவில் உருவாகிறது.
முன்னதாக கூப்சுரத், வீரே டி வெட்டிங் போன்ற படங்களை இயக்கிய சஷாங்கா கோஷ் இந்த புதிய படத்தையும் இயக்கவுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் ராகினி 3 படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.