சினிமா செய்திகள்

மாற்றத்தின் முன்னோடியாகும் தமிழ் படங்கள் - நடிகர் கார்த்தி

தினத்தந்தி

தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பங்கேற்று பேசும்போது, "தமிழ் சினிமா எப்போதுமே நம் சமூகத்தின் பிரதிபலிப்பாக இருந்து வருகிறது. நம் திரைப்படங்களின் தேர்ந்த தொழில்நுட்ப நிபுணத்துவம், இங்கிருக்கும் இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களை மற்ற மொழித் திரைத்துறையினர் நாடி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் கதை சொல்லும் முறை பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைப்படங்கள் தொடர்ந்து காட்சிப்படுத்தப்பட்டு, அதிகமான விருதுகளையும் பாராட்டுகளையும் வென்றுள்ளன.

ஆஸ்கார் உள்ளிட்ட மற்ற சர்வதேச விருது விழாக்களில் தமிழ் திரைப்படங்கள் மற்றும் பிற தென்னிந்திய மொழிகளின் திரைப்படங்கள் பெற்றுள்ள விருதுகள், எங்கள் திறமைக்கான, உலக அரங்கில் நாம் எவ்வளவு முன்னேறி இருக்கிறோம் என்பதற்கான சான்றுகளாகும்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து