சினிமா செய்திகள்

அஜித் படத்தின் தமிழக உரிமை ரூ.60 கோடிக்கு விற்பனை

அஜித்குமார் நடிக்கும் ‘வலிமை’ படம் தயாரிப்பில் இருக்கும்போதே எல்லா ஏரியாக்களின் வினியோக உரிமையும் விற்பனையாகி வருகிறது. இதன் தமிழ்நாடு உரிமை மட்டும் ரூ. 60 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாக கூறப்படுகிறது.

தினத்தந்தி

அஜித்குமார் நடிக்கும் வலிமை படம் தயாரிப்பில் இருக்கும்போதே எல்லா ஏரியாக்களின் வினியோக உரிமையும் விற்பனையாகி வருகிறது. இதன் தமிழ்நாடு உரிமை மட்டும் ரூ. 60 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த உரிமையை கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் ஆகிய இருவரும் வாங்கியிருக்கிறார்கள்.

ரூ.60 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள வலிமை படத்தின் தமிழ்நாடு உரிமையை ரூ.20 கோடி லாபம் வைத்து ரூ. 80 கோடிக்கு விற்க இருப்பதாக பேசப்படுகிறது.

படத்தில் இடம்பெறும் ஒரே ஒரு சண்டை காட்சி தவிர, மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு அவர், டப்பிங் பேசி முடித்து விட்டார். அவர் நடிக்க இருக்கும் ஒரே ஒரு சண்டை காட்சியை ஏதாவது ஒரு வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை