சினிமா செய்திகள்

தியேட்டர்களில் முதல்நாள் சிறப்பு காட்சிகளை ரத்து செய்ய வேண்டும்- தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தல்

அரசு நிர்ணயித்த காட்சி நேரங்கள் மற்றும் டிக்கெட் விலை, கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

தினத்தந்தி

சென்னை,

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பண்டிகை நாட்களில் அல்லது புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல் நாளில், அதிகாலை, காலை சிறப்புக் காட்சிகள் எனப்படும் தனிக் காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது நேரடியாக பொதுமக்களின் வாழ்க்கையில் சுமையையும், ஒழுங்கின்மையையும் உருவாக்குகிறது. சிறப்பு காட்சிகள் என்ற பெயரில், சமூகச் சீர்கேடுகளை அனுமதிக்க முடியாது.

எனவே, தமிழக அரசு உடனடியாக முதல் நாள் சிறப்புக் காட்சிகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், அரசு நிர்ணயித்த காட்சி நேரங்கள் மற்றும் டிக்கெட் விலை, கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், விதிகளை மீறுபவர்களின் மீது, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்