சினிமா செய்திகள்

படங்களுக்கு தமிழில் தலைப்பு - சிவகார்த்திகேயன் விருப்பம்

சினிமா படங்களுக்கு தமிழில் தலைப்பு வைக்க நடிகர் சிவகார்த்திகேயன் வற்புறுத்தி உள்ளார்.

தினத்தந்தி

சினிமா படங்களுக்கு தமிழில் தலைப்பு வைக்க நடிகர் சிவகார்த்திகேயன் வற்புறுத்தி உள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, நான் நடித்துள்ள டாக்டர் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. தியேட்டர்களில் ரிலீசாக வேண்டும் என்பது தயாரிப்பாளர் எடுத்த முடிவு. தியேட்டரில் டாக்டர் படம் வெளியாக வேண்டும் என்பதுதான் எனது ஆசையாகவும் இருக்கிறது.

எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்கள் என்று தயாரிப்பாளரிடம் கூறி இருந்தேன். தியேட்டர்களில் படங்களை பார்ப்பதுதான் கொண்டாட்டமாக இருக்கும். எனது டாக்டர் படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகாமல் தியேட்டர்களில் வெளியாவது மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது தயாராகும் படங்களை வியாபாரம் செய்வது என்பது கஷ்டமாக உள்ளது. படம் திரைக்கு வந்தால்தான் திரையுலகை நம்பி இருப்பவர்களுக்கு வேலை நடக்கும்.

நாய்சேகர் தலைப்பு சர்ச்சையாகி உள்ளது. இந்த தலைப்பு குறித்து வடிவேலுவிடம் சதீஷ் பேசி இருக்கிறார். சதீஷ் கதாநாயகனாக நடிப்பதால் பெரிய தலைப்பு தேவைப்படுகிறது. ஆனால் வடிவேலுவுக்கு அது தேவை இல்லை. எந்த தலைப்பு வைத்தாலும் வடிவேலு படங்களுக்கு சிறப்பாகவே இருக்கும். படங்களுக்கு தமிழில் தலைப்பு வைப்பது நல்லது. நானும் எனது படங்களுக்கு தமிழில் தலைப்பு வைக்கும்படியே சொல்லி வருகிறேன் என்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்