சினிமா செய்திகள்

தமிழக வாக்காளர்களை இழிவுபடுத்தியதாக கமல்ஹாசன் மீது காவல் நிலையத்தில் புகார்

வாக்காளர்களை இழிவுபடுத்தியதாக நடிகர் கமல்ஹாசன் மீது உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #kamalhaasan #RKnagarByElection

சென்னை

கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடப்பு விவகாரங்கள் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்த கமல், மீண்டும் அரசியல் தெடர்பான விமர்சனங்களை முன்வைக்கத் தெடங்கி உள்ளார். அண்மையில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் மகத்தான பெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வார இதழ் ஒன்றில் கட்டுரை எழுதி வரும் கமல்ஹாசன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து விமர்சித்துள்ளார். அதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி விலைக்கு வாங்கப்பட்டது என்றும், ஊரறிய நடைபெற்ற குற்றத்திற்கு மக்களும் உடந்தையாக இருந்தார்கள் என்பது சோகத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி ஜனநாயகத்தின் வீழ்ச்சி என்றும் கமல் விமர்சித்து இருந்தார்.

இதை தொடர்ந்து வாக்காளர்களை இழிவுபடுத்தியதாக நடிகர் கமலஹாசன் மீது உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உடுமலைப்பேட்டையில் வழக்கறிஞர் சாதிக்பாஷா என்பவர் கமல் கூறிய கருத்து தமிழக வாக்காளர்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதென்றும் வாக்காளர்களை பிச்சைகாரர்கள் போன்று விமர்சித்த கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு