சினிமா செய்திகள்

சொல்லி அடித்திருக்கிறார் இயக்குநர் சிவா - 'அண்ணாத்த’ குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து

இயக்குநர் சிவா 'அண்ணாத்த' கதை சொல்லும்போதே என் கண்கள் கலங்கின என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

இயக்குநர் சிவா 'அண்ணாத்த' கதை சொல்லும்போதே என் கண்கள் கலங்கின என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஹூட் செயலியில் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

விஸ்வாசம் போல் ஒரு கதை இருந்தால் கூறுங்கள் என இயக்குனர் சிவாவிடம் கூறினேன். அவரும் அண்ணாத்த கதையை கூறினார். எனக்கு மிகவும் பிடித்தது. அதை அப்படியே எடுக்க வேண்டும் என்றேன். ஆனால் அவர் அதை விட சிறப்பாக எடுத்துள்ளார் என்று கூறினார்

வில்லேஜ் கேரக்டர், நல்ல கதை, அது இரண்டும் போதும் என்று சொன்னார் சிவா. அண்ணாத்த படத்தோட கதையை சொல்லச் சொல்ல கிளைமாக்ஸ் வரும் போது என் கண்ணை கலங்கிவிட்டது. அப்படியே அவருக்கு கைகொடுத்து இதே மாதிரி படம் எடுங்க என்று சொன்னேன்.

சார் இந்த படம் வந்ததும் உங்கள் ரசிகர்கள் மட்டுமில்லாமல் எல்லோரும் பார்ப்பார்கள் என்று சிவா சொன்னார், அதே மாதிரியே சொல்லி அடித்திருக்கிறார் என்று ரஜினிகாந்த் அதில் கூறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்