சினிமா செய்திகள்

'சென்னை சிட்டி கேங்ஸ்டர்' படத்தின் டீசர் வெளியீடு

வைபவ் நடித்துள்ள 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை 28, சரோஜா, கோவா படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் வைபவ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். 'கப்பல்' படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின்னர், பிரியா பவானி சங்கர் மற்றும் வைபவ் இணைந்து 2017-ம் ஆண்டு 'மேயாத மான்' படத்தில் நடித்தனர். மேயாத மான் சிறந்த படமாக அமைந்தது. மக்கள் அனைவராலும் ரசிக்கப்பட்ட படம். இதனால் வைபவின் புகழ் ஓங்கியது.

வைபவின் 25-வது படமான 'ரணம் அறம் தவறேல்' படத்தை ஷெரிப் இயக்கினார். இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து வைபவ் 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர். ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் நகைச்சுவையாக அமைந்துள்ளன. விரைவில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்